தேவகோட்டை: தேவகோட்டை கருதாவூரணி மேல்கரையில் அமைந்துள்ள நாகாத்தம்மன் புற்று முனீஸ்வரர் கோயில் ஆனித்திருவிழா 7 ந்தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரங்கள் நடந்தன. ஆறாம் நாள் பெண்கள் விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர். நிறைவு நாளான எட்டாம் நாள் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் ஏராளமானோர் பூத்தட்டு எடுத்து ஊர்வலம் வந்து அம்மனுக்கும் புற்றுமுனீஸ்வரருக்கும் பூச்சொரிந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.