பதிவு செய்த நாள்
15
ஜூலை
2023
04:07
கடலூர்: கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு, இன்று (15ம்தேதி) மாலை 4:00 மணிக்கு, நந்தி பகவானுக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உட்பட 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.