திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் திருவாடிப் பூர உற்ஸவத்தை முன்னிட்டு ஜூலை 19ல் சூர்ணாபிஷேகம் நடைபெறுகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரத்தை முன்னிட்டு ஜூலை 13ல் கொடியேற்றம் நடந்து ஆடிப்பூர உற்ஸவம் துவங்கியது. தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 8:00 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெறும். ஜூலை 19ல் காலை 9:00 மணி அளவில் ஆண்டாள் பெருமாளுக்கு பள்ளியறையில் நவகலஸ அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து தீபாராதனைக்கு பின்னர் புறப்பாடு நடக்கும். மாலையில் பெருமாள் ஆண்டாள் திருவீதி வலம் வந்த பின்னர் பள்ளியறையில் மஞ்சள் தூளால் சூர்ணாபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த வைபவம் நடைபெறும். ஜூலை 22ல் தேரோட்டமும் மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறும்.