ஆடி அமாவாசை : பந்தலூரில் முன்னோர்களுக்கு திதி கொடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2023 11:07
பந்தலூர்; ஆடி அமாவாசை நாளில் உயிரிழந்த முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்து திதி கொடுத்து ஆசி பெறுவது வழக்கம். இன்று பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ மகா விஷ்ணு கோவில் வளாக ஆற்றங்கரையில் காலை 5 மணி முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவில் கமிட்டி சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. ஆற்றில் நீராடிய பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜைகள் செய்து மீண்டும் ஆற்றில் திதி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நீராடிய பின்னர் கோவிலில் முன்னோர்கள் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தர்ப்பண நிகழ்ச்சியை மனோகரன் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டிமினர் செய்திருந்தனர். சேவ் நீலகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. இதில் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.