பெரியகுளம் கவுமாரியம்மன் திருவிழா ; பாதுகாப்புக்கு 300 போலீசார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2023 05:07
பெரியகுளம்: கவுமாரியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா கோலமாக நடந்து வருகிறது. நாளை முதல் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பெரியகுளம் வராகநதி கரையோரம் கவுமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஹிந்து அறநிலைத்துறைக்கு கட்டுப்பட்ட இக்கோயிலில் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் கம்பத்திற்கு குழந்தை முதல் வயதில் பெரியவர்கள் வரை தண்ணீர் ஊற்றி வருகின்றனர். முக்கிய திருவிழாவான நாளை ஜூலை 18ல் மாவிளக்கு உற்சவம் நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
அக்னிசட்டி விற்பனை அதிகரிப்பு: கொரோனா காலத்தை தவிர ஒவ்வொரு ஆண்டும் அக்னிசட்டி எடுக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தாண்டு அனைத்து கடைகளிலும் ஆயிரக்கணக்கில் அக்னிசட்டி விற்றுள்ளது என்றார்.
போலீஸ் பாதுகாப்பு: இன்று முதல் டி.எஸ்.பி., கீதா தலைமையில் 300 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மதுபானக் கடை அடைப்பு: பெரியகுளத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லை. அதே நேரத்தில் 3 தனியார் மதுபானக் கடைகள் உள்ளன. இன்றும், நாளையும் இரு தினங்கள் கடைகள் அடைக்கப்படும். கள்ளச்சந்தையில் விற்பனையை கண்காணிக்க தனிப்போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.