* எல்லோரிடமும் பணிவுடன் நடப்பவர்கள் உயர்ந்த மனிதர்கள். * உங்களுக்கு கொடுக்கப்பட்ட அருட்கொடைகளைப் பற்றி மறுமை நாளில் கட்டாயம் கேட்கப்படும். * எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப்போகின்றான் என்பதை அறிவதில்லை. * எவருக்கும் தீமை செய்யாமல் இருந்தாலே வாழ்க்கை இனிதாகும். * ஒழுக்கத்தை விரும்புவது என்பது இயற்கையோடு இணைந்த செயல். * அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தைக் குழப்பிவிடாதீர்கள். * மனிதனிடம் காணப்படும் கொடிய குணங்கள் கோழைத்தனம், கஞ்சத்தனம். * உள்ளத்தை உறுத்தும் செயலை செய்யாதீர்கள். * கெட்டதைச் சொல்வதை விட மவுனமாக இருப்பது சிறந்தது. * பிறரை ஏமாற்றி சம்பாதித்த பொருளால் தர்மம் செய்தாலும் பலன் இல்லை. – பொன்மொழிகள்