இக்கட்டான நேரத்தில் பிறர் செய்த உதவியை மறக்காமல் இருப்பது உயர்ந்த பண்பு. ஆனால் ‘இவர் எனக்கு பெரிய உதவி செய்தார். நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்’ என சிலர் பேச்சளவில் மட்டுமே சொல்கின்றனர். செயலில் காட்டுவது இல்லை. அதாவது சொல்லில் இருப்பதை விட செயலிலும் நன்றியுணர்வு வெளிப்பட வேண்டும். அப்போதுதான் அது முழுமை பெறும்.