மனிதர்கள் பலரும் வேடிக்கையாக பேசும்போதும்கூட பொய்யான செய்திகளைத் தருகின்றனர். இது தவறான விஷயம். பேசுவதோ வேடிக்கை. இதில் தவறான செய்திகளை சொல்வது என்ன தவறு என யோசிக்கும் நபரா நீங்கள். கீழே உள்ளவை உங்களுக்குத்தான். * பிறரை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பொய் கூறினால் அழிவு காத்திருக்கும். * வேடிக்கையில் ஈடுபடவேண்டிய அவசியம் இருந்தும் பொய் பேசாதவனுக்கு, சுவர்க்கத்தின் நடுவில் வீடு கிடைக்கும். * பொய்யில் இருந்து முற்றிலும் வேறுபட்டது உண்மை.