* நல்லவனாக இரு. நல்ல செயல்களை செய். நல்ல வாழ்க்கை அமையும். * ஒருநாளில் வருவதல்ல ஒழுக்கம். தினமும் அதை பின்பற்று. * நீ ஒழுக்கமுடன் வாழ்ந்தால் இந்த சமூகம் சீராகிவிடும். * தினமும் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை செய்வதுதான் ஒழுக்கம். * தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களே உயர்ந்தவர்கள். * உண்மை எங்கு உள்ளதோ அங்கு கடவுள் இருப்பார். * இனிய பொய்யை விட கசப்பான உண்மையே சிறந்தது. * குழந்தையின் மனம் துாய்மையானது. அதைப்போல் உன் மனதையும் வைத்திரு. * உண்மை, அன்பு ஆகிய இரண்டுமே உலகின் பெரிய சக்தி. * உலகம் ஒரு கண்ணாடி போன்றது. நீ சிரித்தால் அதுவும் சிரிக்கும். * நாம் அதிகமாக நேசிக்கும் உருவத்திலேயே கடவுள் வெளிப்படுகிறார். * உன் வாழ்க்கை சிறக்க, பிறருக்கு உதவி செய். * முன்பு செய்த வினைகளின் விளைவாகவே உனக்கு நோய்கள் வருகின்றன. * மனச்சோர்வை விட மோசமான நோய் வேறு இல்லை. * உடல்நலத்தில் அக்கறையுடன் இரு. அப்போதுதான் சாதனை செய்ய முடியும். * மனதில் இருக்கும் நோய் நீங்கினால் உடலில் இருக்கும் நோய் நீங்கும் * பிறர் செய்யும் தவறை மறந்தால் அமைதி கிடைக்கும்.