மருத்துமனையில் பெரியவர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்க்க உறவினர்கள் யாரும் வராத நிலையில், சில புறாக்கள் மட்டும் தினமும் அவரது அறையில் இருந்த ஜன்னலில் வந்து நிற்பதை கவனித்தார் நர்ஸ். மறுநாளும் புறாக்கள் வந்து நிற்க ஜன்னலை திறந்து விட்டார் நர்ஸ். அவை பெரியவர் மீது சிறிது நேரம் அமர்ந்து சென்றன. இப்படியே தினந்தோறும் நடக்க... இச்செயலை தலைமை மருத்துவரிடம் தெரிவித்தனர். இது சம்பந்தமாக விசாரித்ததில் தனிமையில் இருக்கும் அவருக்கு வீட்டில் அருகே வாழும் புறாக்களே துணை என்பதை தெரிந்து கொண்டனர். அதனால் நன்றியுணர்வினை வெளிப்படுத்தவே அப்புறாக்கள் வந்தன என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டனர். பெரியவரும் குணமாகி சென்ற போது புறாக்கள் வரவேற்றன. நாம் எதை செய்கிறோமோ அது நமக்கு பலமடங்காகி திரும்ப வரும் என்பது பிரபஞ்ச விதி.