இஸ்கான் கோயிலில் புருஷோத்தம மாததீபத்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2023 11:07
திருநெல்வேலி: வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் புருஷோத்தம மாததீபத்திருவிழா துவங்கியது. வண்ணார்பேட்டை இஸ்கான் கோயிலில் ௩ ஆண்டுகளுக்கு ஒருமுறை புருஷோத்தம மாததீபத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு புருஷோத்தம மாததீபத்திருவிழா நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று கிருஷ்ணர், பலராமர், புருஷோத்தம தீப அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ஹரேகிருஷ்ணமகா மந்திர கீர்த்தனம், தியானம் நடந்தது. சுவாமி சன்னதி முழுவதும் நெய் தீப ஆரத்தி காட்டினர். சிறப்பு அம்சமாக பக்தர்கள் அனைவரும் தங்கள் கைளால் கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆகஸ்ட்மாதம் 16ம் தேதி வரைஒரு மாதம் புருஷோத்தம தீபத்திருவிழா பல்வேறு விசேஷ வழிபாடுகளுடன் நடக்கிறது. இந்நாட்களில் கிருஷ்ணரை தரிசனம் செய்வதன் மூலம் நினைத்த காரியங்கள் நடப்பதுடன், ஆயிரம் மடங்கு நற்பலன் பெறலாம் என்பது ஐதீகம். இந்த பலன்களை பக்தர்களை பெறுவதற்கு இஸ்கான் கோயிலில் தினமும் மாலை6.30 மணிக்கு தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தங்கள் கைகளால் தாங்களே நேரடியாக கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.