பதிவு செய்த நாள்
19
ஜூலை
2023
03:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் தென்கரையில் அமைந்துள்ளது ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் ஆயிரம் கண் உடையாளான கவுமாரியம்மன் ஐஸ்வர்யம் வழங்கி வருகிறார். ஆனித் திருவிழா ஜூலை 4ல் சாட்டுதலுடன் கம்பம் நடப்பட்டது. ஜூலை 10 முதல் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடந்தது. தினமும் அம்மன் ரிஷபம், யானை, அன்னபட்சி, குதிரை, மின்ஒளி, பூ பல்லாக்கு, சிம்மம் வாகனத்தில் உற்சவ ஆலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார். முக்கிய திருவிழாவான (10ம் நாள்) இன்று ஜூலை 19ல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதல் அக்னி சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர். நத்தம் அருகே கோட்டையூரைச் சேர்ந்த பக்தர் ராஜேந்திரன், கன்னத்தில் 14 அடி அலகு குத்தி வந்தார். அனைவரையும் வியக்க வைத்தார். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நாக்கிலும் கன்னத்திலும் அலகு குத்தி, இரு கைகளில் அக்னி சட்டி, ஆயிரம் கண்பானை, தொட்டிலில் பிள்ளையை உட்கார வைத்து அக்னிச்சட்டி எடுத்தனர். எடுத்து அம்மனை வழிபட்டனர். டிஎஸ்பி கீதா தலைமையில் 300க்கும் அதிகமான போலீஸார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமதிலகம் பூசாரிகள் முருகன், ராஜசேகர் மண்டகப் பணியாளர்கள் செய்தனர். தமிழ் மாதம் ஆனி 25 ல் துவங்கிய திருவிழா இன்று ஆடி 3 ல் நிறைவு பெற்றது. ஜூலை 25 மறுபூஜை பாலாபிஷேகம் நடக்க உள்ளது.