ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை ஆடித்தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2023 05:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை (ஜூலை 21) ரத வீதியில் ஆடித் தேர் உலா வர உள்ளது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடி திருக்கல்யாண திருவிழாவுக்கு ஜூலை 13ல் கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. 9ம் நாள் விழாவான நாளை கோயிலில் இருந்து காலை 10 மணிக்கு மேல் பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி, அலங்கரிக்கப்பட்ட ஆடித் திருத்தேரில் எழுந்தருள்வார். பின் அம்மனுக்கு மகா தீபாரணை முடிந்ததும், பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து இழுத்து ரதவீதியில் உலா வருவர்.