கோவை; கோவை, கே.கே.புதூர் 8 ம்நம்பர் தெருவில் இருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. இதில் வளையல் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
*தாமஸ் வீதி தெலுங்கு சந்திப்பில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாட்டில் வேப்பிலை மற்றும் மலர் அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலித்தார். ஏராமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.