Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி அழகியநாச்சி அம்பாள் ... மழை வேண்டி கிடாய்கள் வெட்டி அய்யாபட்டி ஜடாமுனிஸ்வரர் கோவிலில் அன்னதானம் மழை வேண்டி கிடாய்கள் வெட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ஆடிக்குண்டம் திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2023
08:07

மேட்டுப்பாளையம் : வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா இன்று கொடியேற்றதுடன் துவங்கியது.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா இக்கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். ஆடிக்குண்டம் திருவிழா கடந்த ஜூலை 18 ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.அதனை தொடர்ந்து  ஆடிக்குண்டம் திருவிழா இலட்சார்ச்சனை,கிராமசாந்தியும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தேக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக பவானியாற்றில் இருந்து  சிம்மவாகனம் பொறிக்கப்பட்ட கொடிமரம் திருவீதி உலா உடன் கோவிலை வந்தடைந்தது.கோவிலை சுற்றி வந்த பின்னர்,மேள,தாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெற்றுச்சென்றனர்.

இதனை தொடர்ந்து ஆடிக்குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்சியானது வரும் செவ்வாய்கிழமையன்று அதிகாலை 3.00 மணிக்கு அம்மன் அழைப்பு,பின்பு காலை 6.00 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தாசம்பத், செயல் அலுவலர் செய்து வருகின்றனர்.பூஜைகளை தலைமை பூசாரி ரகுபதி,செய்து வருகின்றார்.மேலும் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில்,,காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன்,உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம், மற்றும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் ராஜகோபுரம் சேதமடைந்ததை அடுத்து கோயிலில் நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று இலகு ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று காந்திமதி அம்மன் தவழ்ந்த ... மேலும்
 
temple news
திருப்பூர், காங்கயம் ரோடு, பள்ளக்காட்டுப்புதுார் பரமசிவன் கோவிலில் உள்ள மந்திரகிரி ... மேலும்
 
temple news
அன்னூர்; 150 ஆண்டு பழமையான மதுர காளியம்மன் கோவில் திருப்பணி வேகமாக நடைபெறுகிறது. அன்னூர் அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar