Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி ...  ரிஷிவந்தியம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம் ரிஷிவந்தியம் சுப்ரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா விமரிசை; காவடி எடுத்து வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா விமரிசை; காவடி எடுத்து வந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

24 மார்
2026
11:03

திருத்தணி: திருத்தணி கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில், பக்தர்கள் காவடிகள் எடுத்தும், உடல் முழுதும் அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.


திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி மாத கிருத்திகை விழாவையொட்டி, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்ககிரீடம், பச்சை மாணிக்க கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருத்திகை விழாவில், 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் எடுத்தும், உடல் முழுதும் அலகு குத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். நேற்று ஒரு லட்சம் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்திருந்தது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக, 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar