மழை வேண்டி கிடாய்கள் வெட்டி அய்யாபட்டி ஜடாமுனிஸ்வரர் கோவிலில் அன்னதானம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2023 08:07
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே அய்யாபட்டியில் ஜடாமுனிஸ்வரராக வணங்கப்படும் வேப்ப மரத்திற்கு நல்ல மழை பெய்ய வேண்டி 15 ஆடுகள், 15 கோழிகளை வெட்டி ஆடி மாத அன்னதான விழா நடந்தது.
கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி பாப்பாத்தி அம்மன் நகரில் உள்ள ஒரு வேப்ப மரத்தை ஜடாமுனிஸ்வரராக அப்பகுதி வணங்கி வருகின்றனர். அங்கு நாகம்மாள் சுவாமி கோவில் உள்ளது. இந்நிலையில் இக்கோயிலில் ஆடி உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காணிக்கையாக 15 ஆடுகள் மற்றும் 15 சேவல்களை நல்ல மழை பெய்ய வேண்டும் காணிக்கையாக வழங்கினர். முன்னதாக சாமியாக வணங்கப்படும் ஜடா முனீஸ்வரர் வேப்பமரத்திற்கு சந்தனம் பூசி, மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பொங்கல் வைத்து கிடாய்கள் மற்றும் கோழிகள் வெட்டப்பட்டு அசைவ உணவு சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மாவட்ட கவுன்சிலர் விஜயன், ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஹரிகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.