திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் ஆடி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2023 11:07
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது. திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் ஆடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளினர். கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு காலை 11:05 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றம் முடிந்த உடன் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. ஆகஸ்ட் 1ம் தேதி முளைகொட்டு திருவிழாவும், ஆகஸ்ட் 2ம் தேதி புதன்கிழமை ஆடி தபசுவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.