ஆண்டாள் வாழ்ந்த மாளிகையே தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலாக இருக்கிறது. பெரியாழ்வார் இந்த வீட்டை மகளுக்கு சீதனமாக கொடுத்தார். இதனால் இக்கோயிலுக்கு ‘நாச்சியார் திருமாளிகை’ என்ற பெயரும் உண்டு. ஆண்டாள் சன்னதியில் உற்ஸவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபத்திற்கு ‘முத்துப்பந்தல்’ என்று பெயர். இதில் வாழை மரம், மாவிலை, பூச்செண்டு என சிற்பங்கள் கலைநயம் மிக்கதாக இருக்கும். இந்த மண்டபத்தின் மேல்புறத்தில் மகாவிஷ்ணுவின் திருப்பாதம் இடம் பெற்றிருக்கும்.