மார்கழி நோன்பிருந்த ஆண்டாள், முப்பது பாசுரம் உடைய திருப்பாவை எனும் பாடலைப் பாடினாள். கண்ணனை தரிசிக்க செல்லும் ஆண்டாள் தோழியர்களை எழுப்பும் விதத்தில் இது பாடப்பட்டது. தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஆண்டாள் சன்னதியின் மீதுள்ள விமானத்தில் உள்ளன. இதற்கு ‘திருப்பாவை விமானம்’ என்றே பெயர். இந்த விமானத்தையும் மறக்காமல் தரிசிப்பது அவசியம்.