ஒரு செயலில் வெற்றி பெற ஆசை, தகுதி, செயல்பாடு மூன்றும் அவசியம். இதை இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்பர். இதன் அடையாளமாக பெண் தெய்வங்களை இச்சை, கிரியா சக்தியாகவும், ஆண்தெய்வத்தை புருஷ சக்தியாகவும் சொல்வர். இதற்கு எடுத்துக்காட்டு சித்தி புத்தியுடன் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், பூரணை புஷ்கலையுடன் அய்யனார், ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள். இந்த கோலத்தில் சிவபெருமானை காண்பது அரிது. திருத்தணி அருகே 10 கி.மீ., துாரத்தில் உள்ளது நாப்ளூர் சிவன்கோயில். இங்கு சிவ பூஜை செய்வதற்காக அகஸ்தியர் தனது தவத்தால் கங்கையை வரவழைத்தார். கங்கை, பார்வதியுடன் சிவபெருமானை இங்கு தரிசிக்கலாம்.