கோயில் கருவறை முன் துவார பாலகர் என இருவர் இருப்பர். கடவுள் ஒருவர் என்ற தத்துவத்தை ஒரு விரல் மூலம் உணர்த்துவார் ஒருவர். மற்றொருவரோ கடவுளை தவிர வேறு யாரும் இல்லை என்பதை தெரிவிப்பார். இவர்களை ஒவ்வொரு சன்னதிகளிலும் கீழ்கண்டவாறு அழைப்பர். சிவன் கோயில் – சண்டன், பிரசண்டன் அல்லது திரிசூலமுடையார், மழுவுடையார். அம்பாள் கோயில் – அரபத்ரா, சுபத்ரா, பெருமாள் கோயில் – ஜெயன், விஜயன்