Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் ... வடலூரில் சாதுக்கள் திடீர் உண்ணாவிரதம் வடலூரில் சாதுக்கள் திடீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்பர் மொமின் வரைந்த அனுமார் ஓவியத்தின் பிம்பத்தில் தெரியும் ராமர்: வைரல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அக்பர் மொமின் வரைந்த அனுமார் ஓவியத்தின் பிம்பத்தில் தெரியும் ராமர்: வைரல்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2023
12:07

புதுடில்லி: குஜராத்தை சேர்ந்த இஸ்லாமிய ஓவியர் அக்பர் மொமின், ஹிந்து கடவுளான அனுமாரின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார். இதில் புதுமையாக அதன் கண்ணாடி பிம்பத்தில் கடவுள் ராமரின் உருவமாக தெரியும்படி அவர் வரைந்த நுட்பமான ஓவியம் வைரலாகியுள்ளது.

ஓவியங்களை கலைநயத்துடன் ரசித்து வரைவதை பார்த்திருப்போம். அந்த கலையிலும் புதுமையை புகுத்தி, வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது வெகுசிலரே.. ஒரு உருவத்தை அசல் போன்று பிரம்மிப்புடன் வரையும் 3டி வடிவிலான ஓவியத்திற்கு இன்றைக்கு மவுசு அதிகமாகியுள்ளது. அதிலும் எப்படி வித்தயாசத்தை காட்டுவது என யோசித்து அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளார் குஜராத்தை சேர்ந்த 69 வயதான ஓவியர் அக்பர் மொமின். இஸ்லாமியரான இவர் ஹிந்து கடவுளான அனுமாரை 3டி ஓவியமாக தீட்டி அசத்தியுள்ளார். அதிலும் அந்த ஓவியத்தை கண்ணாடி முன்பாக காட்டினால், கடவுள் ராமரின் பிம்பம் தெரிகிறது. அதாவது ஒரே ஓவியத்தில் இரு வேறு கோணங்களில் இரு ஹிந்து கடவுள்களை வரைந்து அசத்தியுள்ளார் இஸ்லாமிய ஓவியர் அக்பர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், முன்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சேர்ந்தும் ஒரே ஓவியமாக தீட்டியுள்ளார். ஓவியத்தில் பிரதமர் மோடியும், பிம்பத்தில் அமித்ஷாவும் தெரிவதுபோல் வரைந்து பிரமிக்க வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஓவியர் அக்பர் மொமின் கூறியதாவது: எனது ஓவியங்களுக்கு ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என்னை அழைத்து பாராட்டுகிறார்கள். பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குஜராத் வரும்போதெல்லாம் எனது ஓவியங்களை அவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். நான் ஒரு சாதாரண ஓவியன். ஒரு கலைஞனாக, எனது திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன், எனவே நான் மோடி மற்றும் கடவுள் ராமரை தேர்ந்தெடுத்தேன். இதுவரை இந்தியாவில் யாரும் செய்யாத கலையை நான் உருவாக்கியதில் மகிழ்ச்சி. ஒரு முஸ்லிமாக இருப்பதால் எனது கலைப்படைப்பு இரு சமூகங்களுக்கு இடையே பாலத்தை உருவாக்குகிறது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar