திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கோபுரத்தில் மீண்டும் ஒளிரும் மின்விளக்கு வேல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2023 01:07
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரதான கோபுரத்தில், கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களில், மின்விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட மின்விளக்கு வேல் பொருத்தப்பட்டுள்ளது. இதில், மேற்கு பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கு வேல், சில நாட்களுக்கு முன் பழுதைடைந்தது. இதை அறிந்த தையூர் ஊராட்சி தலைவர் குமரவேல், 3 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக மின்விளக்கு வேல் அமைத்து, கோவிலுக்கு அளித்தார். தற்போது, கோவில் நிர்வாகம் சார்பில் பழுதடைந்த வேல் அகற்றப்பட்டு, புதிய மின்விளக்கு வேல் பொருத்தப்பட்டது.