பதிவு செய்த நாள்
29
ஜூலை
2023
06:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் மண்டகபடிக்கு சென்றதால், கோயில் நடை சாத்தப்பட்டது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா ஜூலை 13ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஜூலை 24ல் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் நடந்தது. இதனையடுத்து 17ம் நாள் விழாவான இன்று காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க பல்லக்கில் புறப்பாடாகி, கோயில் ரதவீதி, திட்டக்குடி வழியாக கெந்தமாதன பர்வதம் மண்டகபடியில் எழுந்தருளினர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி, அம்மன் புறப்பாடானதும் கோயில் நடை சாத்தினர். பின் பர்வதத்தில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை முடிந்ததும், இரவு 10 மணிக்கு மீண்டும் கோயிலுக்கு சுவாமி, அம்மன் திரும்பியதும், நடை திறந்து அர்த்தசாம பூஜை முடிந்ததும், மீண்டும் நடை சாத்தப்படும்.