ஆடி சனி; திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2023 11:07
காரைக்கால்: காரைக்காலில் ஆடி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வபவகவான் கோவிலில் ஏராளாமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உலக புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அனுக்கிரகமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பலித்து வருகிறார். ஆடி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சனிஸ்வரபகவானை தரிசனம் செய்தனர் இதில் சென்னை. கேரளா,அந்திரா.கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் நளன்குளத்தில் தோஷங்கள் நீங்க புனித நீராடிவிட்டு அருகில் உள்ள விநாயகரை தரிசனம் செய்த பின்னர் சனிஸ்வபகவானை தரிசனம் செய்தனர்.பக்தர்கள் சுமார் நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர் பக்தர்கள் பாதுகாப்பு குறித்து கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.