ஆதிபராசக்தி கோயில் மகளிர் கஞ்சி கலய யாத்திரை அமைச்சர் துவக்கி வைத்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2023 12:07
தேவகோட்டை: தேவகோட்டையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயில் ஆடி பெருவிழா கடந்த 28 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. சனிக்கிழமை இரவு நூற்றுக்கணக்கான பெண்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். நேற்று காலை சுமார் ஐயாயிரம் பெண்கள் கட்சி கலய ஏந்தி ஆதிபராசக்தி கோயிலுக்கு ஊர்வலம் வந்தனர். ஊர்வலத்தை சக்தி பீட தேவகோட்டை தலைவி முன்னிலையில் தி.மு.க.வைச் சேர்ந்த கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் சக்தி கொடியை அசைத்து துவக்கி வைத்தார். நகர செயலாளர் பாலமுருகன் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அவர்களே கருவறை சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பால்குடம் ஊர்வலத்தை அ.தி.மு.க.வைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் மாவட்ட, நகர மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீட நிர்வாகிகள் பங்கேற்றனர். இத்துடன் ஊர்வலம் படங்கள் அனுப்பி உள்ளேன். அமைச்சர் கொடியசைக்கும் படம் மெயிலில் அனுப்பி உள்ளேன் கம்யூனிகேஷனில் சொல்லி விட்டேன்.