இன்றைய நாளுக்கு இத்தனை சிறப்புகளா?.. இறைவனை வழிபட அனைத்தும் கிடைக்கும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2023 09:08
இன்று ஆடிச்செவ்வாய், பவுர்ணமி, ஆடித்தபசு; திருவோண விரதம் ஒரே நாளில் வருவது சிறப்பானதாகும். இறைவழிபாட்டிற்கு மிக சிறந்த நாள். ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். இன்று பவுர்ணமி; சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிக்கும் நாள். அதன் குளிர்ந்த கிரணங்கள் நம்மைச் சுற்றி உள்ள பிரதேசங்களை மட்டுமின்றி நமது தேகத்தையும் ஊடுருவும். நம்முடைய உடம்பும் உள்ளமும் ஆன்மாவும் தூய்மை அடையும். பவுர்ணமியன்று வலம் வந்தால், சந்திரனின் அற்புத சக்தியை எளிதாய் அடையலாம். இதனால் பிணிகள், தோஷங்கள் நீங்கும். சக்தி பரிபூரணமாய் கிடைக்கும். கோமதி அம்பாள் ஒற்றைக்காலில், ஊசிமுனையில் தவம் இருந்து சிவ, விஷ்ணு தரிசனம் பெற்ற நாள். பல சிறப்பு மிக்க இந்த நாளில் இறைவனை வழிபட அனைத்தும் கிடைக்கும்.