பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சேலம் மாவட்டம் திருமலைகிரியை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர். பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் பாதயாத்திரை, பறவை காவடி, தீர்த்த காவடி உள்ளிட்ட காவடிகள் நேர்த்திக்கடனாக எடுத்து வருகை தருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம், திருமலைகிரியை சேர்ந்த பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். பழநி அடிவாரம் கிரி வீதியில் அலகு குத்தி பறவைக்காவடி எடுத்து வலம் வந்தனர். இதில் 5 பேர் அலகு குத்தி கிரேன் மூலம் அந்தரத்தில் தொங்கியபடி வந்தனர். அதன்பின் நேர்த்திக்கடன் நிறைவு செய்து கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்து திரும்பினர்.