குண்டத்து மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2023 03:08
சுந்தராபுரம்: குறிச்சியிலுள்ள குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் விழா கடந்த, 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வந்த நாட்களில் அம்மனுக்கு ஒவ்வொரு சமூகத்தார் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை குண்டம் தோண்டப்பட்டு கட்டப்பட்டது. மாலை அம்மன் அழைப்பும் இரவு திருக்கல்யானமும் நடந்தன. இன்று காலை அம்மனுக்கு வெண்ணெய். காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பொங்காளியம்மன் கோவிலில் இருந்து கரகங்கள் புறப்பட்டு, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தன. இதையடுத்து, சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் பக்தியுடன் குண்டமிறங்கினர். தொடர்ந்து அக்னி அபிஷேகம், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடந்தன. தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடந்தது. திரளானோர் பங்கேற்று, அம்மனை வழிபட்டு சென்றனர். நிறைவு நாளான, நாளை காலை கொடி இறக்குதலும், மாலை மஞ்சள் நீராட்டும் நடக்கின்றன.