Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 38 ஆண்டுகளுக்குப் பின் புரவி எடுப்பு; ... குண்டத்து மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன் குண்டத்து மாகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
500 ஆண்டு பழமையான விஜயநகரப் பேரரசு கால அடுக்கு நிலை நடுகற்கள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
500 ஆண்டு பழமையான விஜயநகரப் பேரரசு கால அடுக்கு நிலை நடுகற்கள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

02 ஆக
2023
02:08

நரிக்குடி: நரிக்குடி பிள்ளையார்குளத்தில் 500 ஆண்டுகளுக்கு மேலான விஜயநகரப் பேரரசு கால அடுக்குநிலை நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டது.

நரிக்குடி பிள்ளையார்குளத்தில் பழமையான சிலைகள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் கவுதம், மலைமுத்து, பாலகிருஷ்ணன், காளிமுத்து, தர்மராஜா ஆகியோர் வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், ராஜபாண்டிக்கு தகவல் கொடுத்தனர். பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர் உதவியுடன் கள ஆய்வு செய்தனர். 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகரப் பேரரசு கால அடுக்கு நிலை நடுகற்கள் என்பது தெரியவந்தது.

அவர்கள் கூறியதாவது:

அடுக்கு நிலைநடுகல் 1: போரில் ஈடுபட்டு இறந்தவர்களின் தியாகத்தைப் போற்றி, எந்த படைப்பிரிவை சேர்ந்தவர், எவ்வாறு இறந்தார் என்ற விபர குறிப்போடு எடுக்கப்படும் ஒரு நடுகல் மரபாகும். அடுக்கு நிலை நடு கற்களை கொய்சாளர்கள் பின்பற்றும் கலைப் பணியாகும். தமிழகத்தில் விஜயநகரப் பேரரசு காலம் தொடங்கிய போது, இந்த கலைபாணி வந்திருக்க வேண்டும். பிள்ளையார்குளத்தில் 3 கற்கள், ஒரு சதிகல், வில்வீரன் சிற்பம் இடம்பெற்றுள்ளன. அடுக்கு நிலை நடுகல் 5 அடி உயரம், 2 அடி அகலம், முக்கால் அடி தடிமன் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செக்கப்பட்டுள்ளது. இந்த கல்லில் 3 புறம் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முதல் பக்கத்தில் பல்லக்கில் ஒருவர் வணங்கியபடி அமர்ந்துள்ளார். இரு பல்லக்குத்தூக்கிகள் பல்லக்கை சுமந்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. இவர் அரசருக்கு இணையானவராக கருதலாம். இதற்கு கீழ் அடுக்கில் ஒருவர் காளை மீது அமர்ந்து முரசுகொட்டும்படி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. காளைமீது அமர்ந்து முரசு ஒலிக்கும் சிற்பம் மிகவும் அபூர்வமான ஒன்றாகும். காளையின் கழுத்தில் மணிகள் இடம்பெற்றுள்ளது. நன்கு நீண்ட வளைந்த கொம்புகளும் காணப்படுகிறது. காளையின் முன்பாக இருவர் எக்காளம் கொண்டு ஒலி எழுப்பியவாறு செல்லும்படி சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் 2 வது பக்கத்தில் மேலிருந்து கீழாக 5 அடுக்குகளாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் வில்வீரன் ஒருவன் வில்லில் அம்பை வைத்து எய்யுமாறு செதுக்கப்பட்டுள்ளது. வில்லிற்க்கு மேலும் கீழுமாக 2 மாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பார்க்கும்போது இவ்வீரன் வாழ்ந்த காலத்தில் எதிரி நாட்டினர், தனது நாட்டு ஆநிரைகளை கவர்ந்து சென்றிருக்க வேண்டும். அதனை மீட்க சென்ற வில்வீரன் அப்போரில் இறந்திருக்க வேண்டும். இதன் காரணமாக நடுகல் எடுத்திருக்கிறார்கள். இதற்கு கீழ் உள்ள அடுக்கில் குதிரை வீரன் குதிரையில் வாளேந்தியபடி வடிக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கிற்கு கீழ் 3 அடுக்குகள் இடம் பெறுகின்றன. அவற்றில் கீழே வீரர்கள் ஊன்றிய வாளை பிடித்தபடி அருகில் அவர்களது மனைவிகள் நின்றபடி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. 3வது பக்கம் 5 அடுக்குகளாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் குதிரைவீரன் வாளேந்தியபடி, அதற்கு முன் 3 வீரர்கள் வணங்கியபடி, மூவரின் காலடியில் வாள்கள் ஊன்றியபடி செதுக்கப்பட்டுள்ளது. 2 வது அடுக்கில் ஒரு யானையில் அங்குசத்துடன் ஒருவர் அமர்ந்திருக்க, பின்னால் ஒருவர் வாளேந்தியபடி அமர்ந்திருக்கிறார். யானைக்கு முன் 3 வீரர்கள் வணங்கியபடி வாள்கள் அவரவர் அருகே செதுக்கப்பட்டுள்ளது. 3வது அடுக்கில் இருந்து 5வது அடுக்கு வரை குதிரைவீரர்கள் வாளேந்தியபடி அவர்களுக்கு முன் 3 வீரர்கள் வணங்கியபடி நிற்க போர்வாள்கள் அவரவர் அருகே செதுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்கும்போது குதிரைப்படை, யானைப்படையின் வீரர்கள் இறந்ததன் காரணமாக இந்த நடுகல் எடுத்திருக்கலாம்.

அடுக்கு நிலை நடுகல் 2 : 2 அடுக்கு சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த கல் 4 அடி உயரம், 2 அடி அகலம், 1 அடி தடிமன் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. முதல் பக்கத்தில் முதல் அடுக்கில் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்க, இரு மாடுகள் இசையில் மயங்கி அருகில் நிற்கும்படி, கிருஷ்ணரின் மேற்கரங்களில் சங்குச் சக்கரம் இடம்பெற்றுள்ளது. அடுத்த கீழ் அடுக்கில் 2 ஆண்கள் வணங்கியபடி, ஒரு பெண் அருகில் நிற்கும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. 2 வது பக்கத்தில் மேலடுக்கில் கருடன் நின்ற கோளத்தில் பாம்பை பிடித்தபடி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அடுக்கில் இரு வணங்கிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

அடுக்கு நிலை நடுகல் 3 : இந்த நடுகல் 4 அடி உயரம், 1 அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் 3 அடுக்குகளாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. 9 வீரர்களில் ஒருவரை தவிர அனைவரும் வணங்கியபடி சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டும் வாளேந்தியபடி செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லும் போரில் இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நினைவு அடுக்கு நிலை நடுகல்லாகும்.

வில்வீரன் சிற்பம்: இந்த சிற்பம் 2.5 அடி உயரத்துடன் காணப்படுகிறது. வீரன் ஒருவன் இடதுபுறம் சரிந்த கொண்டையுடன் மார்பில் ஆபரணங்கள், முதுகுப்புறம் அம்புரான் கூட்டினை தாங்கியபடி இடது கையில் வில்லினை பிடித்தபடி வலது கையில் அம்பினை எய்யும் நிலையில் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.

சதிகல்: இங்கு ஒரு சதிகல் காணப்படுகிறது. இந்த கல் 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதில் வீரன் ஒருவன் சற்றே மேல் நோக்கிய கொண்டையுடன் நீண்ட காதுகளில் காதணி, மார்பில் ஆபரணங்கள், கைகளில் வளைகாப்புகள், இடையில் இடைக்கச்சை, காலில் வீரக்கழலையும் அணிந்தபடி நின்ற கோலத்தில் சிற்பம் வணங்கியபடி செதுக்கப்பட்டுள்ளது. வலது கையின் இடையில் போர்வாள் மேல் நோக்கி செதுக்கப்பட்டுள்ளது. அருகில் அவரது மனைவி மலர் செண்டுடன் நின்ற கோலத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. தனது கணவன் உயிரிழந்த துக்கம் தாளாமல் கணவனின் சுதையில் தனது உயிரை துச்சமென எண்ணி உடன்கட்டை ஏறி உயிர் துறந்ததன் நினைவாக இந்த நடுகல் எடுத்திருக்கலாம்.

செங்கல் கட்டுமானம்: சிற்பங்கள் காணப்படும் இடத்தில் ஒரு பழமையான செங்கல் கட்டுமானம் காணப்படுகிறது. விஜயநகர பேரரசு காலத்தில் நடு கற்கள் எடுத்து வழிபட்டு வந்துள்ளனர். இங்கு காணப்படும் சிற்பங்களைப் பார்க்கும்போது விஜயநகரப் பேரரசு காலத்தில் இப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு படைப் பிரிவுகளில் இருந்தனர் என்பது தெளிவாகிறது. நடுகற்களை இன்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் வழிபட்டு வருவதாக இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர், என தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பிரசாந்தி நிலையத்தில், இன்று (நவ., 23) சத்ய சாய்பாபா பிறந்த நாள் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
அவிநாசி; கார்த்திகை மாத தேய்பிறை ஜென்மாஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்சிவ சிவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar