பதிவு செய்த நாள்
04
ஆக
2023
07:08
ஆத்தூர்: ஆடிப்பெருக்கை முன்னிட்டு அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மலர் அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவற்றை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் பொங்கல் வழிபாடு, கிடா பலியிடல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவிலில் திருமஞ்சன அபிஷேகத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. யோக ஆஞ்சநேயர், போகர் காளிங்க நர்த்தன கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விசேஷ ஆராதனைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுன குருசாமி கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், கமலவல்லி சமேத கதிர் நரசிங்க பெருமாளுக்கு, திரவிய அபிஷேகத்துடன், துளசி மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வீர ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றுதலுடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் அன்னதானம், ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.