பதிவு செய்த நாள்
07
ஆக
2023
12:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பாதம் தரையில் படாமல், வேட்டியை தரையில் விரித்து, அதன் மீது நடந்து, மனைவி மற்றும் மகளுடன் பக்தர் ஒருவர் கிரிவலம் சென்றார்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் பலர் கிரிவலம் செல்கின்றனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அகஸ்தியர் ஆசிரம ஊழியர் கணபதி, 53; கோவிலில் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை நேற்று வழிபட்டு கிரிவலம் சென்றார். திருவண்ணாமலையில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளதாக, முன்னோர் தெரிவித்துள்ளனர். எனவே தரையில் கால் படக்கூடாது என்பதற்காக, வேட்டியை தரையில் விரித்து அதன் மீது நடந்து, 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்றார். அவருடன் அவர் மனைவி, மகளும் அதேபோல் கிரிவலம் சென்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.