அன்னபக்ஷி வாகனத்தில் விக்ஞான மலை சுப்பிரமணிய சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2023 11:08
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் துணைக் கோயிலான காளஹஸ்தி நகர மையப்பகுதியில் உள்ள விக்ஞான மலை மீது வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று திங்கட்கிழமை காலை அன்னபக்ஷி வாகனத்தில் வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமியை சிறப்பு அலங்காரம் செய்ததோடு கோயில் வளாகத்தில் உள்ள செங்கல்வராய சுவாமி சன்னதி எதிரில் சிறப்பு பூஜைகள் நடத்தினர் . மேலும் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு .தாரக சீனிவாசலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு கோயில் அதிகாரிகள் அர்ச்சகர்கள் கோயில் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுவாமி அம்மையார்கள் உற்சவ மூர்த்திகளை அலங்காரம் மண்டபத்தில் இருந்து மேள தாலங்கள் மங்கள வாத்தியங்களுடன் அன்னபக்ஷி வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நாளை புதன்கிழமை 9 .8 .2023 அன்று ஆடிக்கிருத்திகை வெகு சிறப்பாக நடைபெற உள்ளதை யொட்டி அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் காவடி எடுத்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதோடு பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஸ்ரீ காளஹஸ்தி மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக சிவன் கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோயிலின் புனிதத்தை காக்க வேண்டிய அறநிலையத்துறை வருமானத்தை மட்டுமே பார்க்கிறதே தவிர கோயிலை பாதுகாப்பது இல்லை. இன்று நடந்த இந்த சுவாமி விக்ரகங்கள் உடைப்பு சம்பவத்திற்கு இந்து சமய அறநிலைத்துறையே பொறுப்பு. உடனடியாக செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலுக்கு காவலாளியை நியமித்து, கோவிலை பாதுகாக்க வேண்டும். காவல்துறையும் மாவட்டத்தில் உள்ள முக்கியமான பழமையான, தொன்மையான கோயில்களை பாதுகாப்பதற்கு நேரம் கொடுத்து கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.