Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி கிருத்திகை; சுவாமிமலை முருகன் ... திருப்பரங்குன்றம் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்ற பக்தர்கள்; திருவிழாவில் வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:
தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்ற பக்தர்கள்;  திருவிழாவில் வினோத வழிபாடு

பதிவு செய்த நாள்

09 ஆக
2023
02:08

வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பூசாரியிடம் சாட்டையடி பெற்றும் வினோத நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்.

வடமதுரை அருகே தென்னம்பட்டி கே.குரும்பபட்டியில் யோக விநாயகர், அகோர வீரபுத்திரர், கருக்காளியம்மன், ராவனேஸ்வரர், கெப்பாயிம்மாள், கருப்பண சுவாமி கோயில் உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று இரவு ஆடி உற்ஸவ திருவிழா துவங்கியது. ஆற்றில் இருந்து சுவாமி கரகங்கள் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று காலை நேர்த்திக்கடன் வழிபாட்டிற்காக பல நாட்கள் விரதமிருந்த பெண்கள் உள்பட 170 பக்தர்கள் கோயில் முன்பாக அமர்ந்திருந்தனர். கோயில் பூஜாரி சரவணன் பாரம்பரிய வழிபாடுகளை முடித்த பின்னர் வரிசையாக பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். அதன் பின்னர் பக்தர்கள் தலா ஒரு சாட்டையடி பெற்ற பின்னர் கோயிலுக்குள் சென்று வழிப்பட்டனர். பூசாரியிடம் சாட்டையடி பெறுவதன் மூலம தங்களை பிடித்திருக்கு துஷ்ட சக்திகள் விலகிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 5 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு நடக்கும் திருவிழாவில் பல்வேறு வேண்டுதல்களுக்காக நேர்த்திக்கடன் செலுத்தும் இந்த பக்தர்களின் வினோத வழிபாட்டை காண சுற்றுப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். விழா ஏற்பாட்டினை குரும்ப கவுண்டர் சமூகத்தின் மிளகு, ஆசுத குலத்தார்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar