பதிவு செய்த நாள்
09
ஆக
2023
03:08
குன்றத்தூர்; ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோவிலில் 101 கிலோ சந்தனத்தால் தத்ரூபமாக செய்யப்பட்ட முருகன், வள்ளி தெய்வானை சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோவில்கள் சூழ்ந்த நகரம் என்று கூறப்படும், குன்றத்துாரில் மலையின் மேற்பகுதியில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் அடிவாரத்தில் 16 கால் மண்டபமும், மலைக்கு செல்வதற்காக 84 படிக்கட்டுகளும் உள்ளன. இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னர் காலத்தில், இக்கோவில் நிறுவப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆடி கிருத்திகையை முன்னிட்டு, இக்கோவிலில், அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் திறக்கப்பட்டு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, தங்க கவசம், புஷ்ப அலங்காரம், மோட்ச தீபாராதனை வழிபாடு, பொது தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. கோவிலில் 101 கிலோ சந்தனத்தால் தத்ரூபமாக செய்யப்பட்ட முருகன், வள்ளி தெய்வானை சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டன. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.