ஆடி கிருத்திகை; அன்னூர் முருகன் கோவில்களில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2023 03:08
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா நடந்தது.
பழமையான சாலையூர், பழனியாண்டவர் கோவிலில், காலை 10:30 மணிக்கு அபிஷேக பூஜை துவங்கியது. மதியம் 12:30 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. உற்சவர் கோவில் குன்றின் மீது உலா வந்து சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில், பள்ளி தெய்வானை சமேதரராக சுப்ரமணியசாமிக்கு காலையில் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி உள்பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில் காலை 9:00 மணிக்கு நாம ஜெபம் துவங்கியது. கலச பூஜையும், கல்யாண சுப்பிரமணியசாமிக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. காலை 11:00 மணிக்கு அச்சம் பாளையம் பாலு குழுவின் பஜனை துவங்கி மதியம் 1:00 மணி வரை நடனத்துடன் பஜனை நடந்தது. இதையடுத்து வள்ளி தெய்வானை சமேதரராக சுவாமி திருவீதி உலா நடந்தது. அன்னூர், காரமடை, சிறுமுகைப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவில், எல்லப்பாளையம் பழனியாண்டவர் கோவில், குன்னத்தூர் முருகன் கோவில் என அன்னூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று ஆடி கிருத்திகை விழா நடந்தது.