பெரியபட்டினத்தில் பழமையான கல் நங்கூரம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2023 11:08
பெரியபட்டினம் : பெரியபட்டினம் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற ஊர். இங்குள்ள மன்னார் வளைகுடா கடற்கரையோரம் கப்பலாறு அமைந்துள்ளது. கடலும், பெரிய பரப்பில் நீரும் தேங்கக்கூடிய தரவை பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த இடத்தில் பழமையான கல் நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டது.
பெரியபட்டினம் வரலாற்று ஆர்வலர்கள் ஹாத்தம், ரியாஸ்கான், நவாஸ் ஆகியோர் நேற்று காலை அவ்வழியாக சென்ற போது கல் நங்கூரத்தை கண்டுபிடித்தனர். அவர்கள் கூறியதாவது: இந்த கல் நங்கூரம் 5 அடி நீளம், ஒன்றரை அடி அகலத்தில் அதிக எடை கொண்ட கடற்பாறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய சரக்கு கப்பல்களில் பயன்படுத்தப்படும் இந்த கல் நங்கூரத்தின் மேற்பகுதியில் கயறு செல்வதற்கேற்ப துளை உள்ளது. பெரியபட்டினத்தில் முன்பு போர்ச்சுகீசியர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே தொல்லியல் துறையினர் இப்பகுதியில் உள்ள கல்நங்கூரத்தை ஆய்வு மேற்கொண்டால் இவற்றின் பழமையான விஷயங்களை அறிந்து கொள்ள முடியும், என்றனர்.