குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் ஆடி கிருத்திகை; படிபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2023 11:08
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று படிபூஜை விழா நடந்தது.
ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக ஆடி கிருத்திகை கடைபிடிக்கப்படுகிறது. ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பல்வேறு தோஷங்களும் நிவர்த்தியாகும். நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு சண்முகநாதப் பெருமானுக்கு சந்தன திருமுழுக்காட்டு நிகழ்ச்சியும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து ஆடி கிருத்திகையை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாதப் பெருமானுக்கு பூச்சொரிதல் நடந்தது. மாலையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் படிபூஜை நடந்தது. குன்றக்குடியின் அடிவாரத்தில் படி பூஜை தொடங்கி படி முழவதும் சூடம் ஏற்றி பூஜை நடந்தது. இதில், குன்றக்குடி மட்டுமின்றி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.