தொண்டாமுத்தூர்: மாதம்பட்டியில், கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, கிருஷ்ணர் சிலை தயாரிக்கும் பணி மும்மரமாக நடந்து வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் 29ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி அன்று, கோவில்கள் மற்றும் வீடுகளில் கிருஷ்ணர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். இதனையொட்டி, மாதம்பட்டியில், பொம்மை சிலை தயாரிக்கும் இடத்தில், குழந்தை கிருஷ்ணர், வெண்ணெய் கிருஷ்ணர் என, பல்வேறு வகையான கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இங்கு, 3 இன்ச் முதல் 4 ½ அடி உயரம் வரை கொண்ட சிலைகள் தயாரிக்கப்படுகிறது. விலையும், 80 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.