பதிவு செய்த நாள்
11
ஆக
2023
03:08
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், ஆடி மாத கடைசி வெள்ளியான இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பசூர், நாக கன்னியம்மன் கோவிலில், மதியம் பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னூர் பெரிய அம்மன் கோவிலில், இன்று மதியம் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. 60 பெண்கள் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்றனர். பதுவம்பள்ளி, வீரமாட்சி அம்மன் கோவிலில், அம்மனுக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். மலர் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். கோவில் பாளையம் அருகே கள்ளிப்பாளையத்தில் ஆவாரம் காட்டு மாரியம்மன் கோவிலில் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது, அம்மன், கனி அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னூர் மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், அல்லிக்காரம் பாளையம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.