அய்யாபட்டி முனியப்பன் கோவிலில் உலக நன்மை வேண்டி கிடாய் வெட்டி ஆடி படையல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2023 10:08
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே அய்யாபட்டியில் முனியப்பன் சுவாமி கோவிலில் உலக நன்மை வேண்டி ஆடிப்படையல் திருவிழா நடந்தது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து நேற்று கோவில் முன்பாக 20 கிடாய்கள் வெட்டப்பட்டு நள்ளிரவில் சாதம், ஆட்டுகறி, கோழிக்கறி தயார் செய்யப்பட்டது. பின்னர் இன்று காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், அ.தி.மு.க., ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கறி விருந்து பரிமாறபட்டது.