திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை; பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2023 10:08
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு பால், சந்தன உள்ளிட்டு பொருள்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.