சுதந்திர தினம்; கோவில்களில் சிறப்பு வழிபாடு.. தேசியக்கொடி அலங்காரத்தில் காசி விஸ்வநாதர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2023 01:08
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கியமான கோவில்களில், இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடக்க உள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பொது விருந்தில், அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு; தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளனர். இதேபோல் மற்ற அமைச்சர்களும் பல்வேறு கோவில்களில் நடக்கும் பொது விருந்தில் பங்கேற்கின்றனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர், ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவிலில் தேசியக்கொடி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.