மேலூர்: மேலுார் நாகம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 30 நாட்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற பக்தர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு மின் மோட்டார் மூலம் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4 அடி முதல் 25 அடி நீளமுள்ள அலகு குத்தி பக்தர்கள் நேரத்திக்கடன் செலுத்தினர். நாளை (ஆக. 16) முளைப்பாரி ஊர்வலமும், ஆக. 17 முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது.