நாடு செழிக்க, மழை பொழிய வேண்டி திருப்பதியில் சிறப்பு யாகம்; ஆகஸ்ட் 22 முதல் 26 வரை நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2023 03:08
திருப்பதி; நாடு செழிக்கவும், சரியான நேரத்தில் மழை பொழியவும் இறைவனை வேண்டி ஆகஸ்ட் 22 முதல் 26 வரை கரீரிஸ்டி யாகம், வருணஜபம் மற்றும் பர்ஜன்யசாந்தி ஹோமங்களை திருப்பதி தேவஸ்தானம் நடத்துகிறது.
மழையின் கடவுளான வருண பகவான் அருள் புரியும் வகையில் கரீரிஸ்டி யாகம், வருணஜபம், பர்ஜன்யசாந்தி யாகம், திருப்பதி மலைக் கோயிலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில், தர்மகிரியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்.வி.வேதபாதாசலத்தில் நடக்கிறது. யாக நிகழ்ச்சிகளை 32 வேத, ஷ்ரௌத, ஸ்மார்த்த பண்டிதர்கள் பங்கேற்று நடத்துகிறார்கள். ஆகஸ்ட் 26ம் தேதி மகாபூர்ணாஹுதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் திருமலையில் உள்ள ஸ்ரீதர்ம கிரி வேதபாதாசலம், கே.எஸ்.எஸ்.அவதானி தலைமையில் நடைபெற்று வருகிறது.