குழந்தை வரம் வேண்டி மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டு பெண்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2023 04:08
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி கோவில் குருபூஜை விழா, ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், மண்டியிட்டு மண் சோறு சாப்பிட்டால், குழந்தை பிறப்பதாக நம்பிக்கை உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் இன்று ஏராளமான பெண்கள் வந்தனர். இங்கு நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்று, பரதேசி ஆறுமுக சுவாமி கோவில் குளக்கரையில் பின்னால் கை கட்டி பெண்கள் மண்டியிட்டு, தரையில் வைத்த மண்சோறு சாப்பிட்டு குழந்தை வரம் வேண்டி வழிபட்டனர். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் பணம், தானியம் போன்ற பொருட்களை, நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர்.