பிதுர்களுக்கு திதி கொடுப்பதை செய்யக் கூடாத செயலாகவும், திதி, அமாவாசையன்று கோலமிடக் கூடாது என்பதை அசுபமாகவும் சிலர் கருதுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபடவே கோலமிடுவதை தவிர்க்கச் சொல்லியுள்ளனர். முன்னோரின் ஆசி பெற அமாவாசை, ஆண்டு திதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. புனிதமான இந்த நாட்களில் கேளிக்கை, விளையாட்டு, சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது அவசியம். மகாளய அமாவாசையான இன்று முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு தானம் அளிப்பது நல்லது. இதனால் திருமணத்தடை, குழந்தையின்மை, நோய்கள் மறையும். நிம்மதி நிலைக்கும்.