அயோத்தி மன்னர் தசரதர் பிள்ளைப்பேறு வேண்டி யாகம் நடத்தினார். அதன் பயனாக ராமர், பரதர், லட்சுமணர், சத்ருக்னர் பிறந்தனர். இவர்களின் பிறப்புக்கு வேறொரு காரணமும் உண்டு. ஒரு மகன் மட்டும் இருந்தால் தன் காலத்திற்குப் பிறகு கயாவில் தர்ப்பணம் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் தசரதருக்கு இருந்தது. கயாவில் பிதுர்க்கடன் செய்வது விசேஷம் என்பதால் ஒருவன் இல்லாவிட்டால் வேறொரு மகனாவது தனக்குப் பிண்டம் இடுவான் என நினைத்தார். அதற்காகவே ஒன்றுக்கு நான்காக மகன்கள் இருக்கட்டும் என அவர் எண்ணியதாக சொல்வர்.