ராமாயணம் நடந்த காலமான திரதோ யுகத்திற்கு முன்பே, காலம் சென்ற பெற்றோருக்கு தர்ப்பணம் அவசியம் என்பதும், அதுவும் கயாவில் செய்வது சிறப்பு என்பதும் நடைமுறையில் இருந்துள்ளது. ஒரு மகன் செய்யாவிட்டால் இன்னொரு மகனாவது பிதுர்க்கடன் செய்ய வேண்டும் என்பதும் தெரிகிறது. தசரதருக்கு அந்திம கிரியை செய்யும் பாக்கியம் நான்காவது மகனான சத்ருக்கனுக்கு கிடைத்தது. ராம, லட்சுமணர் காட்டிற்கு சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 14 ஆண்டுக்குப் பின் அயோத்தி வந்த ராமர் பட்டாபிேஷகம் செய்த பிறகு, கயாவில் தர்ப்பணம் செய்தது குறிப்பிடத்தக்கது.